இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு – சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த 1988ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அந்த காணியை 2021ஆம் ஆண்டு உரிமையாளரால் ( உயிரிழந்தவர்) விற்கப்படுவது போன்று மோசடி ஆவணங்களை தயார் செய்து , காணியை 15 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் உறுதி எழுதிய சட்டத்தரணி , சாட்சி கையொப்பம் இட்டவர்கள் என சம்பவத்துடன் தொடர்ப்புடைய ஐவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேவேளை சில வாரங்களுக்கு முன்னரும் உயிரிழந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.