272
கோப்பாய் பகுதியில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர்.
அது தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் மோட்டார் சைக்கிளில் இலக்கத்தினை அடிப்படையாக கொண்டு சந்தேக நபரை சாவகச்சேரி பகுதியில் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும் , பரந்தன் பகுதியில் பெண் சட்டத்தரணியின் சங்கிலியை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் , சந்தேக நபரிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
—
Spread the love