155
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (08.12.22) வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love