171
யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் காவற்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறைவிசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும், கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் காவற்துறையினரிடம், காவற்துறை விசேட அதிரடி படையினர் கையளித்துள்ளனர்.
Spread the love