சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களின் கணக்குகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ், சிஎன்என் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டின் நிருபர்கள், அவரைப் பற்றிய இருப்பிடத் தரவைப் பகிர்ந்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டன.
எனினும் இந்த தடை தொடர்பாக எழுந்த விமர்சனங்களால், ட்விட்டர் பயனர்களிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எலான் மஸ்க் கேட்டிருந்தார்;.
இது குறித்து வாக்களித்த 3.6 மில்லியன் பேரில் 59 வீதமானவர்கள் உடனடியாக தடையை நீக்க வேண்டும் என வாக்களித்தனர்.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தனது இருப்பிடத்தை பின்தொடர்ந்த கணக்குகளின் இடைநீக்கம் இப்போது நீக்கப்படும் என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதேவேளை இந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்ட நழிறுவனங்கள் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.