224
ஆசிரியர்களின் கொடுப்பனவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வட மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வைப்பு செய்யும் பணியை செய்து வந்துள்ளார். அவ்வாறு கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது சிறிது சிறிதாக பணத்தை கையாடல் செய்து வந்துள்ளார்.
நீண்டகாலத்திற்க்கு பின்னரே தொடர்பில் தெரியவந்ததை அடுத்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love