208
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை கைப்பற்றியுள்ளதாகவும், குறித்த நபர் நீண்ட காலமாக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love