168
யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர் மாதகல் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாலி அன்ரனிபுரம் பகுதியை சேர்ந்த இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணமல்போன போயிருந்தா ர்.
காணாமல் போனவரை மறுநாள் திங்கட்கிழமை சக கடற்தொழிலாளர்கள் தேடி சென்ற சமயம் , உயிரிழந்தவரின் படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது. தேடி சென்றவர்கள் குறித்த படகை மீட்டு கரை சேர்த்தனர்.
இந்நிலையில் , காணாமல் போன கடற்தொழிலாளரின் சடலம் இன்றைய தினம் மாதகல் கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.
Spread the love