242
யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது , பயன்படுத்தப்படாது குவித்து வைக்கப்பட்டிருந்த வலைகளுக்குள் இருந்து வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிமருந்துகள் மீன் பிடிப்பதற்காக டைனமேட் தயாரிக்கும் நோக்குடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love