208
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகொன்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர்.
குறித்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love