218
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
Spread the love