180
யாழ்ப்பாணத்தில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களை போதைப்பொருட்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love