194
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர் வரும் 29ஆம் திகதி வரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.
பருத்தித்துறை அருகே கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்ஒப்படைத்தனர் .
அதனை அடுத்து மறுநாள் 12 இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால், பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் குறித்த மீனவர்களை இன்றைய தினம் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 12 மீனவர்களின் விளக்கமறியலை எதிர் வரும் 29ஆம் திகதி வரையில் நீடித்துள்ளார்.
Spread the love