Home இலங்கை  காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு.

 காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு.

by admin

மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) மதியம் மீட்கப்பட்டுள்ளனர்.  குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை(23-12-2022) காலை 10.மணியளவில் காயாக்குளி கடற்கரையில்  இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். 19 மற்றும் 23  வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு  காணாமல் போயிருந்த  நிலையில்   சக மீனவர்கள்  தொடர்ச்சியாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட படகை  அவதானித்த    கற்பிட்டி மீனவர்கள் குறித்த இருவரையும்    இன்று    செவ்வாய்க்கிழமை (27)மதியம் 12.30.மணியளவில்  மீட்ட   கட்பிட்டி மீனவர்கள்     பழுதடைந்த படகு மற்றும் இரண்டு  மீனவ    இளைஞர்களையும் காயாக்குளி மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More