கிளிநொச்சி விநாயகபுரத்தில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01.01.23) காலை வீடொன்றுக்கு சென்ற இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோது, இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்தியவர்களைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.