233
வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு இந்திய மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.
தஞ்சமடைந்துள்ள இந்திய மீனவர்களை வல்வெட்டித்துறை காவல்துறையினா் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். பருத்தித்துறை காவல்துறையினா் மேலதிக விசாரணைக்கு அனுமதி கோரியதை அடுத்து நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
—
Spread the love