132
இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13.01.23) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love