202
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது. சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது. தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார்
Spread the love