201
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருபாலை, டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை, இருபாலை பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நின்ற நால்வர் அடங்கிய குழுவொன்று, வாளினை காட்டி, வீதியில் பயணித்தவரின் மோட்டார் சைக்கிளில் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love