அரசியல் தீர்வு விவகாரத்தில் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமும் முதலில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அற்த இணக்கப்பட்டின் அடிப்படையில் பொது இணக்க கொள்கையை முன்வைத்தால் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் கலந்துக் கொள்ள தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (13.01.23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் தீர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பல செயற்பாடுகளை பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது என சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அரசியல் தீர்வு விவகாரம் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவதால் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் அநுரகுமார திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
அதனால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.