173
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.
பலாலி விமான நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.01.23) காலை விசேட விமானம் மூலம் சென்ற ஜனாதிபதி முன்னதாக நாக விகாரைக்கு சென்று நாக விகாரை விகாராதிபதியை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயரை, ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார்.
Spread the love