177
பட்டிப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கோமாதா உற்சவமும் கோ பவனியும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்றது. குறித்த பவனியானது ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து, மின்சார சபை வீதி ; பெரியகடை ; பேருந்து நிலைய மேற்கு வீதியூடாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
இப் பவனியில் பண்ணையாளர்கள் தமது பசுக்களைப் பவனியாக அழைத்து வந்தவுடன் யாழ் நகர் கடை உரிமையாளர்கள் அவற்றிற்கு உணவளித்தும் மாலையிட்டும் வணங்கினர். இவற்றுடன் பசு வதைக்கெதிரான பதாதைகளையும் நந்திக் கொடிகளையும் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
Spread the love