223
அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநகள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Spread the love