173
நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் அடுத்த மாதம் பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
நியூஸிலாந்தின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அவரது இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அவா் பதவி பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெசின்டா 2017ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற போது, உலகின் இளைய பெண் அரசாங்கத் தலைவராக பதிவாகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love