Home இலங்கைவர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு 5 லட்சம் கொள்ளை

வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு 5 லட்சம் கொள்ளை

by admin

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, ஐந்து லட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர்.

தாக்குதலாளிகள் வர்த்தக நிலையம் மீது வெற்று கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் நடத்தியதுடன் உரிமையாளரினை வாளினால் வெட்டிவிட்டு வர்த்தக நிலையத்தினையும்  அடித்து நொறுக்கியுள்ளனர். அத்துடன் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம்  ரூபா பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு  காவல்துறையினர் ,தடயவியல் காவல்துறையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More