கொழும்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹூமான் அப்பதவியிலிருந்து விலகுவதனை நாடாளுமன்றசெயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
முஜிபர் ரஹூமான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக , தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் முஜிபர் ரஹூமானின் கடிதத்துக்கு அமைய 2023 ஜனவரி 20ஆம் திகதி முதல் பதவி விலகல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளாா்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் , கொழும்பு மாநகர சபையில் போட்டியிடவுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று(20) நாடாளுமன்றில் .அறிவித்திருந்தார்.
கட்சியின் செயற்குழு எடுத்த ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ள நிலையில் , அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.