இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருடான சந்திப்புகளின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளாா். நேற்று முன்தினம் (20) பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 13 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது மிக முக்கியமானது என இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment