318
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கலைத்துறை சேவைக்காக பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இணையற்ற பின்னணி பாடகியான வாணி ஜெயராமை கெளரவப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி, தமிழ், என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட சிறந்த பாடல்களை பாடியுள்ள தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான வாணி ஜெயராமுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக கோல்டன் குளோப் விருதுகளை முன்னதாக வென்ற கீரவாணி அடுத்ததாக வரும் மார்ச் மாதம் ஒஸ்கர் விருதையும் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று கேஜிஎப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொலிவுட் நடிகை ரவீணா டான்டனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love