265
முதன்மை சந்தேக நபருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவரை நேற்றிரவு கைது செய்தனர். “கைது செய்யப்பட்ட முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் நாளாந்த மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி கூலிக்கு உதவியுள்ளார்.
நாளாந்த வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் ஒரு வாரத்துக்கு பணத்தையோ வட்டியையோ வழங்காவிடின் அவர்களை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்துவதை இந்தக் கும்பல் முன்னெடுத்துள்ளது.
சிறு முயற்சிகளில் ஈடுபடுவோர் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நாளாந்த வட்டிக்கு இந்தக் கும்பலிடம் பணத்தை வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் துன்புறுத்தப்பட்ட எவரும் முறைப்பாடு வழங்கவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் காணொளி ஆதாரத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love