யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.
கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.