248
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சகல கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ள அவர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை தொிவித்துள்ளது
Spread the love