161
யாழ்ப்பாணத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை காவற்துறை பிரிவில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு காவற்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் காவற்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love