பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளாா்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு நேற்று முன்தினம் (01) ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.
இவர்களில் ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் மற்றுமொருவா் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.