225
இலங்கையின் சுதந்திரதினமான இன்றைய தினம் சனிக்கிழமை (04.02.23) தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Spread the love