155
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04.02.23) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love