171
Reuters
நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 4,300 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் மழை மற்றும் பனியுடன் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love