190
கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த 61 வயதுடைய செல்வதயாளரூபன் நாகராணி என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (11.02.23) இவரது கணவரான செல்வதயாளரூபன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவனின் மரண செய்தியை தொலைபேசி ஊடாக கேட்ட மனைவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.23) உயிரிழந்துள்ளார்.
Spread the love