170
ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான இருவர் தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கடந்த சனிக்கிழமை (11) மாலை மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இரு வலம்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சீனக்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவா்களை சான்று பொருட்களுடன் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையிளரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love