183
யாழ்ப்பாணம் தாவடி, வன்னியசிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது
வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளை சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love