Home உலகம்பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

by admin

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது   அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு  6.1 ரிக்டர் அளவுகோளில் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான லெகாஸ்பி நகர், வடக்கு சமார், லுசான் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினையடுத்து  இதுவரை அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

 நிலநடுகத்தை அடுத்து அங்கு மக்கள் உஷார் நிலையில் உள்ள நிலையில் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

´பசிபிக் ரிங் ஒஃப் பயர்´ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல் அதிகம் காணப்படும் பூகோள அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாடு உள்ளது. அங்கு எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் போன்றவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளாகும் சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More