துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்பாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு (Christian Atsu) தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்ததை அவரது முகவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கானா தேசிய வீரரான 31 வயதுடைய கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக் அணிகளான எவர்டன், செல்சியா மற்றும் நியூகாஸில் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
பெப்ரவரி 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போன அட்சுவின் உடல் தற்போது ஹடேயின் அன்டாக்யாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் மீட்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய அணி அல்-ரேட் உடனான ஒரு சீசனுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 2022இல் துருக்கியின் ஹடாய்ஸ்போர் அணியில் இணைந்த அட்சு பெப்ரவரி 5ஆம் திகதி சுப்பர் லீக் போட்டியில் வெற்றி கோலை அடித்தார்.
இந்த நிலையில் தங்கள் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை எனவும்; அட்சுவை மறக்கப் போவதில்லை எனவும் அவரது துருக்கிய ஹடாய்ஸ்போர் கழக அணி இரங்கல் வெளியிட்டுள்ளது.
கானா அணிக்காக 65போட்டிகளில் விளையாடியுள்ள அட்சு, 2015ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் கிண்ண தொடரில், அவ்வணி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற மிக முக்கிய வீரராக இருந்தார்.