இந் நிலையில் திருவிழா தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவனில் இருந்து காலை 6 மணி முதல் மு.ப 11மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவனில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய இரு வழிப் பயணக் கட்டணம் ரூ.2000 ஆகும்.
வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 03 ஆம் திகதி பி.ப 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எதிர்வரும் 04 ஆந் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவானது இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. – என்றுள்ளது.
—