Home இலங்கைதப்பியோடிய கைதி மண்டபம் அகதி முகாமில்

தப்பியோடிய கைதி மண்டபம் அகதி முகாமில்

by admin
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிய இரண்டு கைதிகளில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) காலை  மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள தாக தெரிய வருகிறது.

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன்  என்பவரே கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை(21) அதிகாலை தஞ்சமடைந் துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிந்துஜனின் தந்தை செல்வராஜ்  கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில்  தஞ்சம் அடைந்துள்ளதால் உளவுத்துறை அதிகாரிகள்  நடத்திய விசாரணைகளில்
நபர் மண்டபம் அகதி முகாமில் உள்ளமை தெரிய வந்துள்ளது

குறித்த நபர் தலைமன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தப்பிய மற்றைய கைதியை காவல்துறையினா்  தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More