Home இலங்கை யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்

யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்

by admin

யாழ் போதனா  வைத்தியசாலையின்  மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்  போதனா வைத்தியசாலையின்  மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெல்லிப்பழையில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மணல்  பகுதியில் யாழ்  மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த  கோம்பயன் மணல்  இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என குறித்த விடயம் தடைப்பட்டது

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு  வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More