Home இலங்கைஇலங்கையில் இன்றும் நிலஅதிா்வு

இலங்கையில் இன்றும் நிலஅதிா்வு

by admin

இலங்கையின் புத்தள பிரதேசத்தின் சில கிராமங்களில் இன்று (22) முற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. தொிவிக்கப்படுகின்றது. இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வினாடிக்கு மட்டுமே நில அதிர்வு ஏற்பட்டதாக  தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள் உள்ளிட்ட பறவைகள் கடுமையான சத்தங்களை எழுப்பிக்கொண்டு பறந்தன எனவும் தொிவித்துள்ளனா்

ஹதபானகல, புத்தள மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் நிலநடுக்கத்தின் போது மாணவர்கள் மைதானத்துக்கு அனுப்பப்பட்டதாகவுமட மாடிக்கட்டிடங்களில் இருந்தவர்கள் நில நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த நில நடுக்கம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More