200
தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வட மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜப்பானிய தூதரக அதிகாரி கேட்டறிந்துள்ளார்.
அதேவேளை அவரிடம் தேசிய மற்றும் வடக்கின் அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.
Spread the love