புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில், நேற்றைய தினம் குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார்.
பின்னர் வீட்டினை சோதனையிட வேண்டும் என கூறி வீட்டினுள் சென்று, அலுமாரிகளை சோதனையிட்டு, அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.