183
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் பிரசன்னமாகி இருந்த நான்கு படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க மன்று உத்தரவிட்டது.
அதன் போது , இலங்கை கடற்பரப்பில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டமைக்கான இரண்டு படகுகளுக்கு தலா ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் , மற்றுமொரு படகுக்கு ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் , மற்றைய படகுக்கு 54 ஆயிரத்து 500 ரூபாயும் பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும் என மன்று கட்டளையிட்டுள்ளது.
அதேவேளை மன்றின் கட்டளை தொடர்பில் வழக்கு தொடுநர் தரப்பினருக்கோ , எதிராளிகளுக்கோ ஆட்சேபனை இருப் பின் கட்டளைக்கு எதிராக மேன் முறையீட்டை செய்து கொள்ள முடியும். என மன்று பரிந்துரைத்தது. அத்துடன் மேன்முறையீட்டு காலம் வரையில் படகுகள் விடுவிக்கப்படாது , தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டது.
Spread the love