208
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி தேர்தலை உடன் நிறுத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின் போது எழுப்பினர்.
Spread the love