பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி திட்டமிட்ட நடைமுறைக்கேற்ப வட்டி விகிதங்களை உயர்த்தியமை பொருத்தமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்குமிடையில் சில வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், கொள்கை வட்டி வீதத்தை 1% ஆல் உயர்த்துவதாக இலங்கை மத்திய வங்கி நேற்று (03) அறிவித்திருந்தது.
கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவு பொருத்தமானது என்பதுடன் பணவீக்க இலக்கு கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இணங்கியுள்ளதாகவும் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர்களான பீட்டர் ப்ரூவர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
பணவீக்க இலக்குகளை அடைவதில் இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.